பசி வந்தால் பத்தும் பறந்து போகுமாம்
பறந்து போகக் கூடாதா?
கூடவே பசியும்.
**
விதைத்ததும்
வளர்ந்தது பயிர்
விதையாகவே விவசாயி
**
பணக்கார சாமி
பிச்சை எடுக்கிறது
உண்டியல்
**
அறிவியல் ஆய்வுக் கூடம்
வெளியே தொங்கும்
திருஷ்டி பூசணி
**
விநியோகம்
இலவச வேட்டி சேலை
வரிசையில் நெசவாளி
**
எல்லை முனியப்ப சாமி இருக்க
எப்படி நுழைந்தது
ஊருக்குள் சாதி
Saturday, August 23, 2008
என் பக்கங்களுக்கு முன் நான்..
இனிய கவி வணக்கம்,
தோழமையோடு நான்
தோள்களாய் நீங்கள்
பெரியாரியம்,பொதுவுடமை சித்தாந்தம்,
ஆகியவற்றோடு ஒரு கவிஞனாய்
களம் அமைத்து உங்களுடன் உறவாட வந்துள்ளேன்,
என் கவிதைகளையும்,கட்டுரைகளையும்,சிறுகதைகளையும்,
குறும்படங்களையும்,ஆவணப்படங்களையும் ரசித்து விமர்சிக்க வேண்டுகிறேன்.
கவித் தோழமையோடு,
நா.கவி.குமார்

Subscribe to:
Posts (Atom)